13வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்த எதிர்ப்பு... நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட புத்த துறவிகள்... போலீசாருடன் தள்ளுமுள்ளு - பரபரப்பு
இலங்கையில் 13வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற அலுவலகத்தை புத்த துறவிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போல்துவா சந்திப்பில் இருந்து ஊர்வலமாக சென்ற புத்த துறவிகள், 13வது சட்டத் திருத்தத்தை முழுமையாக செயல்படுத்தக் கூடாது என முழக்கமிட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்திய போது, அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை துரத்தி துரத்திச் சென்று போலீசார் கைது செய்தனர்.
Next Story