தனியார் இரும்பு ஆலைக்கு எதிர்ப்பு..விடிய விடிய தொடரும் போராட்டம்..கலெக்டர் வந்தும் கன்வின்ஸ் ஆகல

x

பல்லடம் அருகே செயல்பட்டு வரும் தனியார் இரும்பு உருக்கு ஆலைக்கு எதிராக பொதுமக்கள் இரவிலும் தொடர்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் இரும்பு உருக்கு ஆலையால் இந்த ஆலையால், நிலம், நீர் காற்று மாசுப்படுவதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தின் எதிரே தொடங்கப்பட்ட காத்திருப்பு போராட்டம் இரவிலும் தொடர்ந்ததால், திருப்பூர் மாவட்ட சார் ஆட்சியர் ஜெய் நாராயணன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், ஆலையை நிரந்தரமாக மூடினால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்