கீழே விழுந்த எதிர்க்கட்சி தலைவர் - நெற்றியில் வழிந்த ரத்தம்..பெரும் பரபரப்பு

x

கீழே விழுந்த எதிர்க்கட்சி தலைவர் - நெற்றியில் வழிந்த ரத்தம்..பெரும் பரபரப்பு

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது கால் தவறி கீழே விழுந்த புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவரால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி திமுக மகளிரணி சார்பில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து சுதேசி மில் அருகே நடந்த கண்டண ஆர்ப்பாட்டத்தில் எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் திமுக எம்எல்ஏக்கள், மகளிரணி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தை முடிந்து எதிர்கட்சி தலைவர் மேடையில் இருந்து இறங்கும் போது எதிர்பாராத விதமாக கால் தடுக்கி கிழே தவறி விழுந்தார். இதில் அவருக்கு நெற்றில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இதனையடுத்து அங்கிருந்த திமுகவினர் அவரை ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்