'ஆபரேஷன் கோல்ட் ரஷ்'... கட்டி கட்டியாக சிக்கிய தங்கம்
வருவாய் புலனாய்வு இயக்குநரகம் சுமார் 65.46 கிலோ எடையுள்ள 394 வெளிநாட்டு தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்துள்ளது. 33.40 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த தங்கங்கள்வடகிழக்கு நாடுகளில் இருந்து கடத்தப்பட்டது.ஒரு சிண்டிகேட் மிசோரமில் இருந்து வெளிநாட்டு தங்கத்தை கடத்த தீவிரமாக திட்டமிட்டுள்ளதாகவும், சப்ளை செயின் மற்றும் லாஜிஸ்டிக் நிறுவனத்தின் உள்நாட்டு கூரியர் சரக்குகளை பயன்படுத்துவதாகவும் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது
கடத்தலைத் தடுக்க டிஆர்ஐ மூலம் "Op Gold Rush" தொடங்கப்பட்டது.இந்த குழு முதல் கட்டமாக 19.09.2022 அன்று மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் சரக்குகளை ஆய்வு செய்ததில், சுமார் 19.93 கிலோ எடையுள்ள 120 வெளிநாட்டு தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார்10.18 கோடி ரூபாய் இருக்கும்
இரண்டாவது சரக்கு பீகாரில் கண்டுபிடிக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டது. லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் கிடங்கில் ஆய்வு செய்ததில், சுமார் 28.57 கிலோ எடையும், ரூ.14.50 கோடி ரூபாய் மதிப்பும் கொண்ட 172 வெளிநாட்டு தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன இதேபோல், மூன்றாவது சரக்கு லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் டெல்லியில் தடுத்து நிறுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது, இதன் மூலம் சுமார் 16.96 கிலோ எடையுள்ள 102 வெளிநாட்டு தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு 8.69 கோடி ஆகும்
தோராயமாக 65.46 கிலோ எடையும், தோராயமாக ரூ. 33.40 கோடி மதிப்பும் கொண்ட மொத்தம் 394 வெளிநாட்டு தங்கக் கட்டிகள் மொத்தமாக பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விசாரணை நடந்து வருகிறது.