"வலி தாங்காம கண்ணெல்லாம் சிவந்து போச்சு".. "வலியால துடிச்ச என் பிள்ளை" - கண்ணீரோடு கதறும் பெற்றோர்
- உதகையில், சத்துமாத்திரை அதிகளவில் உட்கொண்டு உயிரிழந்த மாணவியின் உடல், சேலம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற பிரேத பரிசோதனைக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
- நீலகிரி மாவட்டம் காந்தல் பகுதியில், நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான நடுநிலைப்பள்ளியில், கடந்த 3 தினங்களுக்கு முன்பு, தமிழக சுகாதாரத்துறை மூலம் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து மற்றும் போலிக் சத்து கொண்ட ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன
- . இதில், மாணவிகள், போட்டி போட்டு மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டதில், 4 மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டது.
- பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிகளில், 8ம் வகுப்பு மாணவி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
- இந்த நிலையில், மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதை அடுத்து, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
- பின்னர், அமரர் ஊர்தி மூலமாக, நீலகிரி மாவட்டம் காந்தல் பகுதிக்கு மாணவியின் உடல் கொண்டு செல்லப்பட்டது.
- நீலகிரியில், இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகு, சொந்த ஊரான மைசூருவுக்கு கொண்டு செல்லப்பட்டு உடல் அடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதனிடையே, காலாவதியான மாத்திரையை கொடுத்த செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாணவியின் தாய் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
Next Story