சென்னையில் ஆன்லைன் மூலம் காற்றாடி மற்றும் மாஞ்சா நூல் விற்பனை செய்து வந்த நபர் கைது செய்யப்பட்டார்.
ஆன்லைனில் மாஞ்சா நூல் விற்பனை - ஆன்லைனிலே ஆப்பு அடித்த போலீஸ்
சென்னையில் ஆன்லைன் மூலம் காற்றாடி மற்றும் மாஞ்சா நூல் விற்பனை செய்து வந்த நபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை வியாசர்பாடி பகுதியில் ஆன்லைன் மூலம் சிறுவர்கள் காற்றாடி வாங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து வாட்ஸ் ஆப் மூலம் போலீசார் ஆர்டர் செய்த நிலையில், 50 காற்றாடிகள் அடங்கிய பண்டல் 600 ரூபாய்க்கு டெலிவரி செய்யப்பட்டது. அதை டெலிவரி செய்தவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், அண்ணாநகர் பகுதியில் உள்ள வீட்டில் ஆயிரத்து 500 காற்றாடிகள், 600 மாஞ்சா நூல் உருண்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மாஞ்சா நூல் தயாரிக்கும் பார்த்திபன் என்ற நபரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story