"இனி ஆன்லைன் வழி PhD படிப்பு செல்லாது" - அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவிப்பு
"இனி ஆன்லைன் வழி PhD படிப்பு செல்லாது" - அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவிப்பு
ஆன்லைன் வழியில் பிஎச்டி படிப்பு செல்லத்தக்கதல்ல என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ளது.
மேலும், தனியார் கல்வி மற்றும் பயிற்சி நிலையங்கள் வெளிநாட்டு கல்வி நிலையங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஆன்லைன் வழியில் பிஎச்டி பயிலலாம் எனும் விளம்பரங்களை கண்டு மாணவர்கள், பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம் எனவும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனம், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மட்டுமே பிஎச்டி பயில வேண்டும் என கடந்த 2016 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக்குழு பிஎச்டி படிப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், விதிமுறைகளை பின்பற்றியே பிஎச்டி பயில வேண்டும் என்றும் ஆன்லைன் வழியில் பிஎச்டி பயின்றால் அது செல்லாது என்றும் தற்போது அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ளது.