ஆன்லைன் கேமுக்கு அடிமையான சோகம்.! - தலைவலி, பார்வை குறைபாடால் அவதி- விரக்தியில் இளைஞர் விபரீத முடிவு

x
  • கோவையில், ஆன்லைன் ரம்மி மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான இளைஞர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • கோவை வெள்ளலூர் கருப்புராயன் கோயில் வீதியை சேர்ந்தவர் மதன்குமார். பட்டதாரியான இவர், வேலை கிடைக்காத‌தால், வீட்டிலேயே இருந்துள்ளார்.
  • அடிக்கடி செல்போனில் ஆன்லைன் ரம்மி மற்றும் ஆன்லைன் விளையாட்டில் ஈடுப்பட்டதால், அதற்கு அடிமையாகியுள்ளார்.
  • இதனால் கடந்த சில நாட்களாக கடுமையான தலை வலி மற்றும் பார்வை குறைப்பாட்டால் மதன்குமார் அவதி அடைந்து வந்துள்ளார்.
  • இதனால் மன வேதனையில் இருந்த அவர், பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
  • வீட்டுக்கு வந்து பார்த்த அவரது தாய் நாகலட்சுமி, மதன்குமாரை பார்த்து கதறி அழுதார்.
  • தகவலறிந்து சென்ற போலீசார், உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்