எகிரி அடிக்கும் சின்ன வெங்காயம் விலை - உரிக்காமலேயே கண்ணீர் சிந்தும் இல்லத்தரசிகள்

x

பொள்ளாச்சி, காந்தி வாரச்சந்தையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை வெங்காய வரத்து நாளொன்றுக்கு ஐந்தாயிரம் பைகளாக இருந்தது. ஆனால் தற்போது இது, வெகுவாக குறைந்து, நாளொன்றுக்கு 500 பைகள் மட்டுமே வெங்காயம் வருகின்றன. இதற்கு காரணமாக திருப்பூர், கோவை விவசாயிகள் வெங்காயம் நடுவதை தவிர்த்ததும், பெங்களூருவில் பெய்து வரும் மழையும் கூறப்படுகிறது. இதனால், சின்ன வெங்காயம் மொத்த விற்பனையில் கிலோ ரூபாய் 165க்கும், சில்லறை விலையில் ரூபாய் 190க்கும் விற்கப்படுகிறது. தமிழகத்தில் தக்காளியைத் தொடர்ந்து பல்வேறு காய்கறிகளின் விலை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்