மூட்டையோடு மூட்டையாக கிடந்த வெங்காய வியாபாரி...கள்ளகாதலனோடு சேர்ந்து கொன்ற மனைவி...

Mute
Mute
Current Time 0:00
/
Duration Time 0:00
Loaded: 0%
Progress: 0%
0%
0:00
Stream TypeLIVE
Remaining Time -0:00
 
Technical info
  • Duration [sec]: 0.000
  • Position [sec]: 0.000
  • Current buffer [sec]: 0.000
  • Downloaded [sec]: 0.000
Issue report sent
Thank you!
x

40 வயதான இவர் மண்டியிலிருந்து மொத்த விலைக்கு வெங்காயம் வாங்கி, அதை ஆம்னி வேனில் வைத்து வீதி வீதியாக சென்று வியாபாரம் செய்து வந்திருக்கிறார். இவருக்கு துணையாக கருமண்டபம் பகுதியை சேர்ந்த ஆறுமுகமும் அவரது மனைவி சுமதியும் உதவி வந்துள்ளனர். அவ்வப்போது தனலட்சுமியும் ஒத்தாசை செய்து வந்திருக்கிறார். சம்பவம் நடந்த அன்று நவலூர் ஒத்தக்கடை பகுதியில் வெங்காய வண்டி சென்றிருக்கிறது அந்த வண்டியை போலீசார் வழிமறித்து விசாரித்த போது தான் உள்ளே இருந்த வெங்காய மூட்டைகளுக்கு நடுவே சிவலிங்கத்தின் உடலும் மூட்டை கட்டி கிடந்திருக்கிறது. உடனே போலீசார் மூவரையும் பிடித்து விசாரித்திருக்கிறார்கள். அப்போது தான் நடந்த கொலைக்கான காரணம் வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. 36 வயதான தனலட்சுமிக்கு சிவலிங்கம் ஒன்றும் முதல் கணவர் அல்ல..இரண்டாவது கணவர்.

கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் வாசன் எஸ்டேட் பகுதியை சேர்ந்த பிரபு என்பவருடன் திருமணமாகி ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அந்த குழந்தையோடு பிரபுவுடன் அனைத்து உறவுகளையும் முடித்து கொண்டிருக்கிறார் தனலட்சுமி. அதன்பிறகு முதல் கணவருக்கு விவாகரத்து கொடுத்துவிட்டு கொல்லப்பட்ட சிவலிங்கத்தை இரண்டாவது கணவனாக ஜோடி சேர்த்து கொண்டிருக்கிறார். நாளடைவில் சிவலிங்கமும் போரடித்து போக தனது மூன்றாவது காதல் பக்கத்தை செந்தில்குமார் என்பவரோடு எழுத தொடங்கி இருக்கிறார் தனலட்சுமி. கணவனை வெங்காயம் விற்க ஆம்னியில் அனுப்பி விட்டு இருவரும் பைக்கில் ஊர் சுற்றி உல்லாசமாக இருந்திருக்கிறார்கள். இவர்களின் கள்ளக்காதல் பக்கங்களை சிவலிங்கத்தின் கண்ணில் பட, மனைவியை கண்டித்திருக்கிறார்."நீ இல்லனா அவன், அவனும் இல்லனா அடுத்தவன்" என கராராக சொல்லி கள்ளக்காதலை கைவிட மறுத்திருக்கிறார் தனலட்சுமி. ஆனால் சிவலிங்கம் விடுவதாயில்லை. நாளுக்கு நாள் தனலட்சுமியை அடித்து உதைத்து கண்டித்திருக்கிறார்.

இதனால் கொதித்து போன தனலட்சுமி இனியும் சிவலிங்கத்தை விட்டு வைப்பது தலைவலி என நினைத்து அந்த கொடூரத்தை செய்ய துணிந்திருக்கிறார். சம்பவம் நடந்த அன்று காலையே கணவன் மனைவிக்குள் கள்ளக்காதல் சண்டை எழுந்திருக்கிறது. உடனே கள்ளக்காதலன் செந்தில்குமாரை வீட்டிற்கு வரச்சொல்லியிருக்கிறார் தனலட்சுமி.இருவரும் ஒன்று சேர்ந்து சிவலிங்கத்தை அடித்து கொலை செய்திருக்கிறார்கள். உடனே சிவலிங்கத்துடன் வேலை செய்யும் ஆறுமுகத்தையும், சுமதியையும் உதவிக்கு அழைத்து சடலத்தை மூட்டை கட்டி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் எரித்து காணாபிணமாக்க திட்டம் தீட்டி இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் ப்ளான் பாதியில் சொதப்பிவிட போலீசில் சிக்கி இருக்கிறார்கள். போலீசாரின் சோதனையின் போது, பயத்தில் செந்தில்குமார் வண்டியில் இருந்து தப்பி ஓடி தலைமறைவாகி இருக்கிறார்.இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தனலட்சுமி, ஆறுமுகம், சுமதி ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தப்பி ஓடிய கள்ளக்காதலன் செந்தில்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்