"மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி.. மத்திய அரசை முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்"...

x

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி 28 வது இளங்கலை மருத்துவ பட்டமளிப்பு விழாவில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பங்கேற்றார். நிகழ்ச்சியில், MBBS இளங்கலை முடித்த மருத்துவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். முன்னதாக விழாவில் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், சிறுநீரக பாதிப்பு ஏற்படும் நோயாளிகளுக்காக புதிய சிறுநீராக பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றார். தமிழ்நாட்டில் உள்ள 2286 ஆரம்ப சுகாதார நிலையங்களில், சிறுநீரக பாதிப்பு இருப்பவர்களை கண்டறிந்து சோதனை செய்து மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழ்நாட்டிற்கு இன்னும் 6 மருத்துவ கல்லூரிகள் வேண்டும் என மத்திய அரசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்