விநாயகர் சதுர்த்தி அன்று... பெங்களூருவுக்கு மட்டும் விதிக்கப்பட்ட தடை.. சர்ச்சையான உத்தரவு
விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு பெங்களூரூ நகரில் இறைச்சி விற்க தடை விதித்து மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி தினத்தையொட்டி கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி எந்த விதமான இறைச்சியும் விற்க அனுமதியில்லை என பெங்களூர் மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநிலத்தின் பிற பகுதிகளில் இது போன்ற தடைகள் இல்லாத சூழலில் தலைநகர் பெங்களூருவில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Next Story