'ஓவர் நைட்'டில் ஓகோவென மாறிய மோர்பி மருத்துவமனை - "மோடியின் போட்டோ ஷூட்டா?" -எதிர்க்கட்சிகள் சாடல்

x

பிரதமர் மோடி வருகையையொட்டி மோர்பி மருத்துவமனையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

குஜராத் மாநிலம் மோர்பியில் தொங்கு பாலம் விழுந்ததில் காயம் அடைந்தவர்களை பிரதமர் மோடி சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி இரவே மருத்துவமனையில் சீரமைப்பு பணிகளும், தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்பட்டது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. மருத்துவமனையில் பெயிண்டிங் செய்யும் பணிகள், டைல்ஸ் ஒட்டும் பணிகள் நடக்கும் வீடியோவும் வெளியாகியிருக்கிறது. இது பாஜக குஜராத் மக்களை ஏமாற்றும் செயல் என ஆம் ஆத்மி விமர்சித்துள்ளது. மக்கள் உயிரிழந்த நிலையில் அவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகளை செய்கிறார்கள் என காங்கிரஸ் கட்சியும் கடுமையாக தாக்கியுள்ளது. ஆனால் இது வழக்கமாக செய்யப்படும் பணிகளே என மோர்பி மருத்துவமனை நிர்வாகம் பதில் அளித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்