மதுரை சித்திரை திருவிழாவின் 7ஆம் நாள்...யாளி வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன் - பக்தர்கள் சாமி தரிசனம்

x

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில், சித்திரை திருவிழாவின் ஏழாம் நாள் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது...https://youtu.be/ZNKmYE4c3J8

கடந்த 23-ஆம் தேதி, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, நாள்தோறும் மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை அம்மனுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஏழாம் நாள் நிகழ்வில், நந்திகேஸ்வரர் வாகனத்தில் சுந்தேஸ்வரர் பிரியாவிடை அம்மனுடனும், யாளி வாகனத்தில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளி வீதியுலா வந்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்