தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில், மும்பை வாழ் தமிழர்களை ஒருங்கிணைத்து கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.
மும்பையில், தமிழர்களை ஒருங்கிணைத்து 'சிவந்தி ப்ரீமியர் லீக் - SPL' என்ற பெயரில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
போட்டியை மும்பை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பிரகாஸ் கங்காதரே தொடங்கி வைத்தார்.
போட்டிகளை தெட்சண மாற நாடார் சங்கத் தலைவர் M.S.காசிலிங்கம், செயலாளர் மைக்கேல் ஜார்ஜ் உள்ளிட்டோர் பார்வையிட்டு வாழ்த்தினர்.
ஆறு அணிகள் பங்கேற்ற முதல் சீசனில், முதல் பரிசாக 51 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.
முதல் மூன்று இடங்களை பிடித்த அணிகளின் வீரர்களுக்கு, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உருவம் பொறிக்கப்பட்ட வெள்ளி காசு வழங்கப்பட்டது.
சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜெகதீஷ், மும்பை நிர்வாகிகளான நற்பணி மன்றத்தில் தலைவர் ரஷல் நாடார், செயலாளர் ராஜ்குமார் நாடார், துணைத் தலைவர் வடிவேல் நாடார், பொருளாளர் ஜெபக்குமார் நாடார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.