ஆம்னி பேருந்தின் புதிய கட்டணம்... சென்னையில் இருந்து இவ்ளோ ரூபாயா?

x

புதிய கட்டண விகிதங்களை, ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் அனைத்து சங்க பிரதிநிதிகள், இன்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் ஒப்படைத்தனர்.

அதில், சென்னையில் இருந்து கோவை வரை ஏசி அல்லாத பேருந்து கட்டணம்,1815 ரூபாயும், வால்வோ ஸ்லீப்பரில் அதிகபட்ச கட்டணம் 3,025 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து மதுரைக்கு சாதாரண பேருந்தில், குறைந்தபட்ச கட்டணம், 1,776 ரூபாயாகவும் வால்வோ ஸ்லீப்பரில் 2,688 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து தென்காசிக்கு சாதாரண பேருந்தில் 2,079 ஆகவும், வால்வோ ஸ்லீப்பரில் 3,465 ரூபாய் ஆகவும்,

சென்னையிலிருந்து சேலத்திற்கு ஏசி அல்லாத பேருந்தில் 1,435ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணமாக 1,995 ரூபாய் ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து ஏசி அல்லாத பேருந்தில் குறைந்தபட்ச கட்டணம் திருநெல்வேலிக்கு 2063 ரூபாயகவும், அதிகபட்சமாக 3437 ரூபாயாகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்