மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உம்மன் சாண்டி - குடும்பத்தினர் கவனிக்கவில்லை என குற்றச்சாட்டு

x

காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதலமைச்சருமான உம்மன் சாண்டி நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், சில தினங்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், உம்மஞ்சாண்டிக்கு சிகிச்சை அளிப்பதில் அவரது குடும்பத்தினரும், காங்கிரஸ் கட்சியும் போதிய அக்கறை காட்டவில்லை என பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுத்த‌து.

இதன் காரணமாக, உம்மன் சாண்டி மேல் சிகிச்சைக்காக விமானம் மூலம் பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன்னை குடும்பத்தினரும், காங்கிரஸ் கட்சியும் நன்றாக கவனித்துக் கொள்வதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்