குடியிருப்பில் தனியாக இருந்த முதியவர்.. கேஸ் சிலிண்டர் கசிவால் நேர்ந்த சோகம்

x

சென்னை அடுத்த ஆவடியில், சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த முதியவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த கோபால் என்பவர், மனைவியை இழந்த நிலையில், தனியாக வசித்து வந்தார். வீட்டில் உணவு சமைத்த போது, எதிர்பாராத விதமாக கேஸ் கசிவு ஏற்பட்டு, பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது. இதில், வீட்டிலிருந்த பொருட்கள், கதவு, ஜன்னல் உள்ளிட்டவை உடைந்து சேதமடைந்த நிலையில், கோபாலுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மீட்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி கோபால் உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்