"ஐயோ எனக்கு சந்தை வேணும்... சந்தை வேணும்" - மூதாட்டி கத்திக் கதறிய காட்சிகள்
வார சந்தைக்கு அனுமதி மறுத்த நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் வியாபாரிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கான கட்டுமான பணிகள் விரைவில் நடைபெற உள்ளதால் நகராட்சி சார்பில் புதன் கிழமை வார சந்தைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் கடை போட அனுமதி கேட்டும், மாற்று இடம் தரக்கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வியாபாரிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தின் போது சந்தை வேண்டும் என்று ஒரு மூதாட்டிக் கத்திக் கதறி கண்டனம் தெரிவித்தார்.
Next Story