மதுரை சிறையில் அலுவலர்கள் ரூ.100 கோடி ஊழல் புகார்.. டிஜிபி அதிரடி உத்தரவு

x

மதுரை மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். அவர்களுக்கு மருத்துவ பேண்டேஜ், ஆபீஸ் கவர், பேக்கரி பொருட்கள் உள்ளிட்ட தயாரிப்பு தொழில்கள் கற்றுத் தரப்படுகின்றன. அதன் மூலம் சிறை நிர்வாகத்துக்கு வருவாயும், கைதிகளுக்கு வருமானமும் கிடைத்து வருகிறது. இந்த பொருட்களை வெளி சந்தையில் விற்பனை செய்ததில் சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரை தொடர்ந்து, அது சார்ந்த விசாரணையும், தணிக்கை ஆய்வும் நடத்தப்பட்டன. இந்த புகாரில் தொடர்புடைய பணியாளர்கள் சிலர் தொடர்ந்து இங்கு பணிபுரிவது தெரிய வந்தது. அண்மையில் மதுரை சிறையில் ஆய்வு நடத்திய சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி, இது குறித்தும் விசாரணை நடத்தியிருந்தார். இந்த சூழலில், இங்கு பணியாற்றிய சிறை அலுவலக கண்காணிப்பாளர், மேலாளர், சிறைக்காவலர், உதவியாளர் என 12 அலுவலர்களை தமிழகத்தின் பல்வேறு சிறைகளுக்கு பணியிட மாற்றம் செய்து டிஜிபி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்