அனுமதியின்றி மீன் பிடித்ததால் ஆத்திரம்.. 300 கி.மீன்களை கண்மாயில் கொட்டிய அதிகாரிகள் - துர்நாற்றத்தால் ஊரே வெளியேறிய அவலம்!

x

சிவகங்கையில் கண்மாயில் தாமரைக் கொடி அகற்றும் பணியின் போது, இறந்த மீன்கள் மீண்டும் கண்மாய்க்குள்ளேயே கொட்டப்பட்டதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது...

காளையார் கோயிலை அடுத்துள்ளது இந்த மேல மருங்கூர் கிராமம்... இக்கிராமத்தின் நுழைவு வாயிலிலேயே அமைந்துள்ளது பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாய் ஒன்று... அருகிலேயே அரசுப்பள்ளி, அங்கன்வாடி மையம், ஊராட்சி மன்ற கட்டடங்கள் செயல்பட்டு வரும் நிலையில், கண்மாய் முழுக்க கொடி படர்ந்து காணப்பட்டதால் மக்கள் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. அதை அகற்றக் கோரி கிராம மக்கள் அதிகாரிகளுக்கு மனு அளிக்கவே, கொடியை கிரா அமக்களே அகற்றி சுத்தம் செய்ய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு குழு அமைத்து அப்பகுதி மக்கள் தாமரைக் கொடி அகற்றும் பணியில் ஈடுபட்ட நிலையில், கண்மாயில் அதிகளவு மீன்கள் இருந்ததால் அவற்றை வெளியில் எடுத்து விட்டு, பணிகள் முடிந்ததும் மீண்டும் கண்மாய்க்குள் விட முடிவு செய்யப்பட்டது. அப்போது, ஒருவர் அனுமதி இன்றி கண்மாயில் மீன்பிடித்து செல்வதாக தாலுகா அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அதிகாரிகள் உடனடியாக சுத்தம் செய்யும் பணியை நிறுத்தியதுடன், சுமார் 300 கிலோ அளவிலான இறந்த மீன்களை மீண்டும் கண்மாய்க்குள்ளேயே கொட்டியுள்ளனர். அந்த மீன்கள் அனைத்தும் நீரில் அழுகி, துர்நாற்றம் வீசி சுகாதார சீர் கேட்டை ஏற்படுத்தியுள்ளன...


Next Story

மேலும் செய்திகள்