35 ஆண்டுகளாக ஆக்கிரமித்த நிலத்தை... அதிரடியாக இடித்து தள்ளிய அதிகாரிகள்
கும்பகோணம் அருகே, ஆக்கிரமிப்பில் இருந்த நீர்வளத்துறைக்கு சொந்தமான இடத்தை 35 ஆண்டுகளுக்கு பிறகு பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வண்ணக்குடி வாய்க்கால் கரைகளின் பல்வேறு பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மகேஸ்வரபுரம் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் இருந்த குடியிருப்புகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர். தொடர்ந்து மற்ற பகுதியில் உள்ள அக்கிரமிப்புகளும் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story