திருப்பதி சொத்துக்கள் குறித்து வெளியான வெள்ளை அறிக்கை !

x

திருப்பதி தேவஸ்தானத்தின் தங்க இருப்பு 10 ஆயிரத்து 258 கிலோவாக அதிகரித்துள்ளது என, தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.

திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி,

தேவஸ்தான வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் தேவஸ்தானத்தின் 960 சொத்துக்கள் தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளதாக கூறினார்.

அந்த சொத்துக்களின் பரப்பளவு 7 ஆயிரத்து 126 ஏக்கர் என தெரிவித்துள்ளார்.

கடந்த 2019- ஆம் ஆண்டு வங்கிகளில் 13 ஆயிரத்து 25 கோடி ரூபாயை, தேவஸ்தானம் டெபாசிட் செய்ததாகவும், கூறியுள்ளார்.

இப்போது தேவஸ்தானத்தின் வங்கிக் கணக்கில் 15 ஆயிரத்து 938 கோடி ரூபாய் உள்ளது என்றும், தேவஸ்தானத்தின் தங்க இருப்பு ஏழாயிரத்து 339 கிலோவில் இருந்து 10 ஆயிரத்து 258 கிலோவாக அதிகரித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

கடற்படையில் பயன்படுத்துவது போன்ற ட்ரோன் எதிர்ப்பு சாதனங்களை வாங்கி திருப்பதி மலையில் பொருத்த பெல் நிறுவனத்துடன் தேவஸ்தான நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தர்மா ரெட்டி குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்