தேடி தேடி வேட்டையாடிய அதிகாரிகள்... அடுத்தடுத்து சிக்கிய 'கை ராசி' டாக்டர்கள் - செல்லுமிடமெல்லாம் காத்திருந்த அதிர்ச்சி

x
  • தேடி தேடி வேட்டையாடிய அதிகாரிகள்... அடுத்தடுத்து சிக்கிய 'கை ராசி' டாக்டர்கள் - செல்லுமிடமெல்லாம் காத்திருந்த அதிர்ச்சி
  • டாக்டர்கள் என சொல்லிக் கொண்டு போலியாக மருத்துவம் பார்த்து வந்தவர்கள் தமிழகத்தில் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
    • படித்திருப்பது என்னவோ பத்தாம் வகுப்பு தான்.. ஆனால் ஏரியாவிலேயே கைராசியான டாக்டர் என பெயரெடுத்த பலரும் இன்றும் கிராமங்களில் உண்டு...
      • அலோபதியா? சித்த மருத்துவமா? என எதுவும் தெரியாது. ஆனால் அவர் டாக்டராக பல ஆண்டுகளாக ஒரு கிளினிக்கை வைத்துக் கொண்டு மக்களுக்கு ஊசி போட்டு மாத்திரையை கொடுத்து அனுப்புவார்.. இவர்களால் ஆபத்து என வரும் போது தான் போலீசார் உஷாராவார்கள்..
      • ஆனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலி டாக்டர்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக அடிக்கடி புகார்கள் வரவே, இந்த விவகாரத்தை கையில் எடுத்தது காவல்துறை. எங்கெல்லாம் புகார்கள் வந்ததோ அந்த பகுதிகளில் உள்ள கிளினிக் மற்றும் டாக்டர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர் போலீசார்..
      • கடலூரில் விசாரணையில் இறங்கிய போலீசார் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி.. காரணம் மருத்துவமே படிக்காமல் பல ஆண்டுகளாக டாக்டர்களாக 4 பேர் செயல்பட்டு வந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்...
      • அதன்படி மஞ்சக்குப்பம் பெண்ணையாறு பகுதியை சேர்ந்த குணசேகர், செல்லங்குப்பம் புதுநகரை சேர்ந்த மதியழகன், புதுப்பேட்டை கரும்பூரை சேர்ந்த சத்யா, பச்சையாங்குப்பத்தை சேர்ந்த காந்தரூபன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்...
      • இதில் காந்தரூபன் டிப்ளமோ மட்டும் படித்துவிட்டு டாக்டராக பல ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வந்திருக்கிறார். கைது செய்யப்பட்ட 4 பேரின் கிளினிக்கில் இருந்தும் மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள், குளுக்கோஸ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது...
      • இதேபோல் தஞ்சை மாவட்டம் வல்லத்தில் போலி டாக்டர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். முறையாக மருத்துவம் படிக்காமல் மெடிக்கல் ஷாப் வைத்து நடத்தி வந்த அவர்கள், போலியாக சிகிச்சை அளித்து வந்தது உறுதியான நிலையில் ராஜூ மற்றும் சரவணன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்..
      • இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பேளகொண்டப்பள்ளி கிராமத்தில் மக்களுக்கு சிகிச்சை அளித்த வந்த சீமா மற்றும் சவுகத் அலி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்ததோடு அவர்களின் கிளினிக்கிற்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்..
      • போலீசாரும், அதிகாரிகளும் போலிகளுக்கு செக் வைத்து வரும் நிலையில் மற்ற மாவட்டங்களிலும் இந்த வேட்டை தொடரும்பட்சத்தில் ஒட்டுமொத்தமாக போலி மருத்துவர்கள் களையெடுக்கப்படுவார்கள்...

Next Story

மேலும் செய்திகள்