#Breaking|| 288 உயிர்களை பறித்த ஒடிசா ரயில் விபத்து.. 3 பேர் கைது - அதிரடி காட்டிய சிபிஐ

x

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்..ரயில் விபத்து தொடர்பாக பஹானகா பஜார் ரயில் நிலையத்தின் உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட 5 பேரை சிபிஐ விசாரணைக்கு அழைத்து சென்றது விசாரணையின் தொடர்ச்சியாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஒடிசா ரயில் விபத்தில் பஹனகா பஜார் ரயில் நிலையத்தின் உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட ஐந்து பேரை சிபிஐ விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளது. அதில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது... பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகாவில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக தென்கிழக்கு ரயில்வேயின் (SER) ஐந்து ஊழியர்களை மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரணைக்காக அழைத்துச் சென்றது.பஹனகா பஜார் நிலையத்தில் இருந்த உதவி நிலைய மேலாளர் பி.எஸ். மொஹந்தியை சிபிஐ அழைத்துச் சென்றது; பாலசோர் சிக்னல் பொறுப்பாளர் கே மஹந்தா, பொறியாளர் அமீர் கான், பப்பு யாதவ் (தொழில்நுட்ப நிபுணர்-I) மற்றும் அபினாஷ் மொஹந்தி (தொழில்நுட்ப நிபுணர்-III) ஆகிய ஐந்து பேரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்... அதில் உதவி நிலைய மேலாளர் மற்றும் சிக்னல் பொறியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது...

சிபிஐ தனது முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், விபத்து நடந்த பகனகா பஜார் ரயில் நிலையத்திற்கு அருகே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததாகவும் இதன் காரணமாக இன்டர் லாக்கிங் அமைப்பு மூடப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. மேலும் பராமரிப்பு பணிகள் விரைவாக முடிக்கப்படாத காரணத்தினால் கணினியின் மூலம் இயங்கும் இன்டர்லாக்கிங் அமைப்பை அணைத்துவிட்டு ஸ்டேஷன் மாஸ்டர் கிரீன் சிக்னல் கொடுத்ததாக முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி இருந்த நிலையில் உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட சிக்னல் பொறியாளர்கள் ஐந்து பேரும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அதில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதற்கிடையில், ரயில்வே ஊழியர்கள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகள் உட்பட 50 க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலத்தை சிபிஐ பெற்று வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்