ஒடிசா ரயில் விபத்து - காவல்துறை கடும் எச்சரிக்கை
ஒடிசா ரயில் விபத்து குறித்து வதந்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, ஒடிசா காவல்துறை தெரிவித்துள்ளது.
பாலசோரில் நிகழ்ந்த ரயில் விபத்துக்கு, சில சமூக ஊடகங்கள் மூலம் மதவாத வண்ணம் கொடுப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுபோன்ற தவறான நோக்கமுள்ள பதிவுகளை பரப்புவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. வதந்திகளை பரப்பி, மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒடிசா காவல்துறை தெரிவித்துள்ளது.
Next Story