ஒடிசா ரயில் விபத்து.."100க்கும் மேற்பட்டவர்களுக்கு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு, மேம்பட்ட சிகிச்சை அளிக்க செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து அம்மாநிலத்திற்கு சென்றுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, விபத்தில் பலியானவர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள, புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விபத்தில் காயமடைந்த 100க்கும் மேற்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுவதாக தெரிவித்தார். மேலும் காயமடைந்தவர்களுக்கு மேம்பட்ட சிகிச்சை அளிக்க செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Next Story