கோயில் திருவிழாவில் ஆபாச நடனம்? - அதிர்ச்சியில் பொதுமக்கள்

x

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கோயில் திருவிழாவில் இடம்பெற்ற நடன நிகழ்ச்சி ஆபாசமாக இருந்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி அருகே உள்ள கன்னந்தேரி கோயில் திருவிழாவில் நடன நிகழ்ச்சி நடத்த காவல்துறையிலனர் அனுமதி அளிக்கவில்லை. இதனால் விழா குழுவினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அனுமதி பெற்றனர். இந்நிலையில் அக்கோயில் திருவிழாவையொட்டி ஆடல் பாடல் குழுவினரை வைத்து நடத்தப்பட்ட நடன நிகழ்ச்சியில் ஆபாசமாக ஆடை அணிந்து ஆடியதாக நேரில் பார்த்த பொதுமக்கள் பலர் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்