அடுத்த மாதம் அதிமுகவில்... ஓபிஎஸ் வெளியிட்ட புதிய அறிவிப்பு
- அடுத்த மாதம் அதிமுக முப்பெரும் விழா கொண்டாடப்படும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
- முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சென்னை எழும்பூரில் நடைபெற்றது.
- ஓ.பி.எஸ் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 87 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் 176 தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
- இந்தக் கூட்டத்தில், அதிமுகவை சர்வாதிகார மற்றும் சதிகார கும்பலிடம் இருந்து மீட்டெடுப்பது என்றும்,
- முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் அதிமுகவின் நிரந்தரப் பொதுச்செயலாளர் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- அனைத்து மாவட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி உள்ளிட்டவற்றுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்றும்,..
- எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா, ஜெயலலிதா பிறந்தநாள் விழா, அதிமுக பொன்விழா ஆகிய முப்பெரும் விழாவினை மார்ச் மாதம் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story