பிரியாணி சாப்பிட்ட நர்ஸ் பலி... 20 பேர் மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் உணவு பிரியர்கள்!

x

கேரளாவில், பிரியாணி சாப்பிட்ட செவிலியர் உயிரிழந்ததன் எதிரொலியாக, 429 ஹோட்டல்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டதில், 43 உணவகங்கள் மூட உத்தரவிடப்பட்டது.

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த செவிலியர் ரேஷ்மி என்பவர், உணவகத்தில் அல்பாமா சிக்கன் மற்றும் மந்தி பிரியாணி சாப்பிட்டுள்ளார். சில மணி நேரத்திலேயே உடல்நலக்கோளாறு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மேலும், அதே உணவகத்தில் சாப்பிட்ட 20 பேருக்கு, வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். செவிலியர் உயிரிழப்பை அடுத்து, அந்த உணவகத்திற்கு அம்மாநில சுகாதாரத்துறையினர் சீல் வைத்தனர். அதனைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள உணவகங்களில் சோதனை நடத்த கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டதன் பேரில், 429 உணவகங்களில் சோதனை நடத்தப்பட்டன. இதில் 43 நிறுவனங்கள் மூட உத்தரவிடப்பட்டது. 138 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்