மசூதி இடிக்க நோட்டிஸ்..வெடித்த கலவரம். போலீஸ் மீது கல்வீசி தாக்கியதால் பரபரப்பு - அடுத்து போலீஸின் தரமான செயல்
குஜராத்தில், ஆக்கிரமிப்பு கட்டிட விவகாரம் தொடர்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கல்வீசித் தாக்கியதில் போலீசார் காயமடைந்தனர்.
குஜராத் மாநிலம் ஜூனாகத்தில் உள்ள மாஜிவாடி பகுதியில், அரசு நிலத்தில் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ள மசூதி ஒன்றை இடிப்பதற்காக ஜூனாகத் உள்ளாட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மசூதி அமைந்துள்ள பகுதியில் 600க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது ஒரு கும்பல் கல்வீசியதில் காவலர்கள் சிலர் காயமடைந்தனர். பேருந்து ஒன்றின் மீது கல் எறிந்ததால் பயணிகள் சிலருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்நிலையில், கல் எறிந்த கும்பலை பிடித்த காவல்துறையினர், அவர்களை வரிசையாக நிற்க வைத்து தடியை கொண்டு நையப்புடைத்தனர்.