நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் - ராகுல் காந்தி புதிய மனு

x

அவதூறு வழக்கில் வரும் 25-ஆம் தேதி ஆஜராக பாட்னா மாவட்ட நீதிமன்றம் அளித்த சம்மனை ரத்து செய்யக்கோரி பாட்னா உயர்நீதிமன்றத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்துள்ளார்.

கர்நாடக மாநிலம் கோலாரில், கடந்த 2019ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில், அனைத்து கொள்ளையர்களும் மோடி என்ற குலப்பெயரையை ஏன் கொண்டிருக்க வேண்டும் என பேசியதாகக்கூறி, ராகுல் காந்திக்கு எதிராக, பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுஷீல் குமார் மோடி அவதூறு வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த பாட்னா மாவட்ட நீதிமன்றம், வரும் 25ம் தேதி வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக, ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியது. இதனை ரத்து செய்யக்கோரி, பாட்னா உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீது வரும் 24ம் தேதி விசாரணை நடைபெறுகிறது. இதே விவகாரத்தில், ராகுல் காந்தியை குற்றவாளி என சூரத் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், எம்.பி. பதவி பறிக்கப்பட்டு, பின்னர் தண்டனையை நிறுத்திவைக்க கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்