இஸ்லாமியர்களை கட்டி வைத்து கட்டையால் அடித்த போலீசார் - குஜராத்தில் 11 காவலர்களுக்கு நோட்டீஸ்

x

இஸ்லாமியர்களை கம்பத்தில் கட்டி வைத்து கட்டையால் அடித்த போலீசார் - குஜராத்தில் அதிர்ச்சி - 11 காவலர்களுக்கு நோட்டீஸ்

குஜராத்தில் இஸ்லாமியர்கள் சிலரை கட்டி வைத்து, கட்டையால் அடித்த காவல் துறையினருக்கு, குஜராத் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அக்டோபர் 3ஆம் தேதி, குஜராத்தின் கேடா மாவட்டத்தில் உள்ள உந்தெலா கிராமத்தில் நடந்த திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த பகுதியில் இருந்த இஸ்லாமியர்கள் சிலரை, காவல்துறையினர் ஒரு கம்பத்தில் கட்டி வைத்து, தடியால் அடித்த காணொலி சமூக ஊடகங்களில் வைரலானது. இதில் பாதிக்கப்பட்ட 5 இஸ்லாமியர்கள் குஜராத்

உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதன் அடிப்படையில், இந்த தாக்குதலை முன்னெடுத்த 11 காவலர்கள் மற்றும் குஜராத் அரசுக்கு, குஜராத் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மனுதார்களை காவல்துறையினர் கட்டி வைத்து, அடித்து, அதை வீடியோவாக எடுத்து, சமூக ஊடகங்களில் காவல்துறையினரே பகிர்ந்துள்ளதாக மனுதாரர்கள் கூறியுள்ளனர். இது உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணானது என்றும் கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்