மறு பிரேத பரிசோதனைக்கு பின் மாணவி ஸ்ரீமதி வீட்டில் நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடலை பெற்றுக் கொள்ளுமாறு, அவரது சொந்த ஊரான பெரிய நெசலூர் கிராமத்தில் வட்டாட்சியர் நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு நிலவியது.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மூன்று பேர் கொண்ட மருத்துவர்கள் குழு, அவரது உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இதனிடையே, மாணவியின் பெற்றோர்கள் உடலை வாங்க வராததால், வட்டாட்சியர் விஜய பிரபாகரன் பெரிய நெசலூர் கிராமத்தில் உள்ள மாணவியின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டினர். பின்னர், வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால் அங்கு இருந்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் நோட்டீஸ் வழங்கி, கையெழுத்து வாங்கி சென்றனர்.
Next Story