சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்ட வடமாநிலத்தவர்கள்
சென்னையில், ஆதரவற்று மனநலம் பாதிக்கப்பட்ட 160 வடமாநிலத்தவர்கள் மீட்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னையில் ஆதரவற்ற நிலையில் பொது இடங்களில் தங்கியுள்ளவர்கள், பெண்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு உதவ, காவல் கரங்கள் என்ற திட்டம் பெருநகர காவல் துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஆதரவற்ற நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த 160 வடமாநிலத்தவர்களை மீட்டு அவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கி, ராஜஸ்தான் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிகழ்வில் அமைச்சர் மா. சுப்பிரமணியன், காவல் ஆணையர் சங்க ஜிவால் ஆகியோர் சம்பந்தப்பட்டவர்களை வழி அனுப்பி வைத்தனர்.
Next Story