அமெரிக்காவை தாக்கும் பவர் ஷாக் கொடுத்த வடகொரியா ஏவுகணை - 5 நாட்டு தலைவர்கள் அவசர ஆலோசனை

x

அமெரிக்க எல்லையைத் தொடுமளவு திறன் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை வடகொரியா நிகழ்த்தியுள்ளதாக ஜப்பான் குற்றம் சாட்டியுள்ளது...

2 நாட்களில் 2வது முறையாக வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது... கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணையானது சுமார் 15 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து தாக்கும் வல்லமை உடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவால் ஏவப்பட்ட இந்த ஏவுகணை ஜப்பானின் ஹொக்கைடோவுக்கு மேற்கே சுமார் 210 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் விழுந்தது. இதற்கு அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் கனடா நாடுகளின் தலைவர்களுடன் இன்று அவசர பேச்சுவார்த்தை நடத்துவார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்