மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்கும் திட்டம் இல்லை |உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் தகவல்
தமிழகத்தில் மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மதுபானங்களை கண்ணாடி பாட்டில்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்ய முடிவு செய்து தமிழ்நாடு அரசு கடந்த 1996-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது.
இதை எதிர்த்து, பிரதாப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மதுவை பிளாஸ்டிக் பாட்டிலில் விற்பனை செய்வதற்கு தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுத்து, அரசாணை பிறப்பித்த போதும், அரசின் கொள்கை முடிவை எதிர்த்து மனுதாரர் வழக்கு தொடர முடியாது என டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்தது.
மேலும், மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் தற்போது வரை இல்லை என்றும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்தது.
Next Story