இனி பள்ளிகளில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் | Sanitary Napkin
கேரளாவில் பெண்கள் பள்ளிகளில், சானிட்டரி நாப்கின் விற்பனை இயந்திரம் கட்டாயமாக்கப்படும் என, கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இதுகுறித்து சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பள்ளிகளில் நாப்கின் அகற்றும் முறை உறுதி செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார். உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து, பள்ளிகளில் இந்த வசதியை பொதுக் கல்வித் துறை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார். 'குப்பையில்லா கேரளா' திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். பெண்கள் அதிக நம்பிக்கையுடன் வளரட்டும் - மாதவிடாய் ஒரு பாவம் என்று புனையப்பட்ட பொது அறிவை வெல்லட்டும் என்றும், பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
Next Story