"இந்தியர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்" - சூடானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
சூடானில் ராணுவத்திற்குள் மோதல் வெடித்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது. ராணுவம் மற்றும் துணை ராணுவப்படைக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த நிலையில் கார்டோம் விமான நிலையம், அதிபர் மாளிகை உள்ளிட்ட பகுதிகளை பிடித்துள்ளதாக ஆர்எஸ்எஃப் படை அறிவித்துள்ளது. அதே நேரத்தில், துணை ராணுவப்படையின் முகாம்கள் மீது விமானப்படை மூலம் தாக்கி வருவதாக ராணுவம் அறிவித்துள்ளது. இதனிடையே, சூடானில் வாழும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. வீட்டுக்குள் இருக்குமாறும், வீட்டைவிட்டு வெளியே வருவதை தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Next Story