2 பெண்களை வைத்து நிர்வாண பூஜை.. எலுமிச்சத்தை ஆகாயத்தில் பறக்க வைத்து மேஜிக் - பதைபதைக்கும் அதிர்ச்சி வீடியோ
ஆந்திராவில், இரண்டு பெண்கள் நிர்வாண பூஜையில் ஈடுபடுத்தி, பாலியல் தொல்லை கொடுத்ததாக, போலி பூசாரி உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த போலி பூசாரி நாகேஸ்வரராவ் என்பவர், பில்லி, சூனியம் வைப்பது போன்ற சித்து வேலைகளை செய்து, அப்பகுதி மக்களிடம் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. மேலும், பழங்கால நாணயங்களை வைத்து, புதையல் எடுப்பதாக கூறி பூஜை செய்தும் வந்துள்ளார். இதனிடையே, நிர்வாண பூஜைக்கு இரண்டு பெண்கள் தேவை, அவர்களுக்கு தலா 50,000 பணம் கொடுப்பதாகவும், இதன்மூலம் புதையல் கிடைக்கும், அதில் ஒரு பங்கு அளிப்பதாகவும் தனது நண்பர் நாகேந்திர பாபு என்பவரிடம் ஆசை வார்த்தை கூறியதாக தெரிகிறது. இதை நம்பிய நாகேந்திர பாபு, இரண்டு பெண்களை சிலக்கலூர் பேட்டைக்கு அழைத்து வந்து நிர்வாண பூஜையில் பங்கேற்க வைத்த நிலையில், அவர்களுக்கு நாகேஸ்வரராவ் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.