200 ஆண்டுகளை கடந்த நீலகிரி.... களைகட்டிய கலைநிகழ்ச்சிகள்.... ஆடி அசத்திய மாணவிகள்

நீலகிரி மாவட்டத்தின் 200ஆவது ஆண்டை சிறப்பிக்கும் வகையில், பல்வேறு மாநிலங்களின் நடன நிகழ்ச்சிகள் குன்னூரில் நடைபெற்றன.
x

நீலகிரி மாவட்டம் 200 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், நீலகிரி 200 என்ற தலைப்பில் குன்னூரில் உள்ள பிராவிடென்ஸ் மகளிர் கல்லூரியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் தமிழக பாரம்பரிய நாட்டுப்புறப் நடனம், படுகர் மக்களின் நடனம், கேரளா, பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், நீலகிரியின் அடையாளமான ஜெகரண்டா பூக்கள், நீலகிரி வரையாடு உள்ளிட்டவை கொண்டு சிறப்பு பாடல் பாடி மாணவிகள் அசத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்