Train பூச்சி போல 7 கி.மீ-க்கு நிற்கும் வாகனங்கள்.. சரிசெய்ய முடியாமல் சிக்கி தவித்த போலீஸ்
- நீலகிரி மாவட்டம் கூடலூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன
- தமிழகம், கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களின் சுற்றுலா பயணிகள், கூடலூர் வழியாகவே நீலகிரியின் பல்வேறு சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
- இந்நிலையில், வார விடுமுறையையொட்டி உதகைக்கு சென்ற சுற்றுலா பயணிகள், சுற்றுலா தலங்களை பார்த்துவிட்டு, மீண்டும் மாலையில் தங்களது சொந்த மாநிலங்களுக்கு கூடலூர் வழியாக சென்றனர்.
- அப்போது, அதிக அளவிலான வாகனங்கள் வந்ததால், சுமார் 7 கிலோமீட்டர் தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- இதனால், போக்குவரத்தை சரி செய்ய முடியாமல் காவல்துறையினர் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
Next Story