இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (18-08-2023) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x

மீனவர் வீடு கட்டும் திட்டத்தில், 5 ஆயிரத்து 35 பேருக்கு பட்டா உள்ளிட்ட 10 அறிவிப்புகளையும் மீனவர் நல மாநாட்டில் இன்று வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்...

மத்திய பாஜக ஆட்சியில் தான், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு...பிரதமர் மோடி எடுத்த சபதம் என்ன ஆனது? எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கேள்வி...நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் 'இந்தியா' கூட்டணி கச்சத்தீவை மீட்டெடுக்கும் எனவும் உறுதி...

சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்த லேண்டர், நிலவை நெருங்குகிறது...நிலவை சுற்றிவரும் லேண்டரின் சுற்றுப்பாதை இன்று மேலும் குறைக்கப்பட்டதாக இஸ்ரோ தகவல்...லேண்டர் எடுத்த நிலவின் புதிய புகைப்படம் வெளியீடு...

"நீட் எதிர்ப்பு போராட்டம் நடைபெறும்""யார் என்ன விமர்சனம், கேலி செய்தாலும் கவலை இல்லை...""நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்துவோம் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திட்டவட்டம்...

சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் 20 கோடி ரூபாய் செலவில் புதிய ரயில் நிலையம்...தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று ஒப்புதல்...

மதுரையில் வரும் 20ஆம் தேதி நடைபெறும் அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க முடியாது...எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரை கிளை...

மணிப்பூர் மாநிலம், உக்ருல் மாவட்டத்தில் நிகழ்ந்த கலவரத்தில் 3 குக்கி இன இளைஞர்கள் சுட்டுக்கொலை...வன்முறைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 190-ஆக உயர்வு...


Next Story

மேலும் செய்திகள்