செம்ம பிளான்..முதல்வருக்கு குவியும் பாராட்டுக்கள்!
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் விரிவுப்படுத்தப்படுகிறது.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டமான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக 2022-23ஆம் கல்வியாண்டில் மாநகராட்சி, நகராட்சி கிராம ஊராட்சி மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள ஆயிரத்து 545 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப்பள்ளிமாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டது. தற்போது இத்திட்டமானது 2023-24ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இதற்கான சுற்றறிக்கை, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.