கூடுதலாக கிடைத்த ரூ.25 லட்சம்.. அமைச்சருக்கு நன்றி சொன்ன விவசாயிகள்

x

என்எல்சி நிர்வாகம், கையகப்படுத்திய நிலங்களுக்கு 25 லட்ச ரூபாயை, கூடுதலாக நில உரிமையாளர்களுக்கு வழங்கி உள்ளது.கரிவெட்டி, கீழ் வளைய மாதேவி, மேல் வளையமாதேவி உள்ளிட்ட பல கிராமங்களில் என்.எல்.சி சுரங்கம் நிலங்களை கையகப்படுத்தியது. இதற்கு 15 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்ட நிலையில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் என்எல்சி நிர்வாகத்திடம் பேச்சு நடத்தினார். இதனையடுத்து, என்எல்சி நிர்வாகம்,17 விவசாயிகளுக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்திற்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்