அரியலூர் அகழாய்வில் கிடைத்த அடுத்த ஆச்சரியம் - ஆடிப்போன சீனா
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேடு அகழாய்வில் சீன பானை ஓடு உள்பட 3 பழங்கால பொருட்களை தொல்லியல் துறையினர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது. சீன பானை ஓடுகள், காசு வார்ப்பு, சுடு மண்ணால் அலங்கரிக்கப்பட்ட அச்சு முத்திரை ஆகிய 3 பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்களை பத்திரமாக தொல்லியல் துறை மீட்டு மாளிகை மேட்டில் உள்ள அருங்காட்சியத்தில் வைத்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். மேலும் இது போன்ற பழங்கால பொருட்களும், அரிய பொக்கிஷங்களும் கிடைக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் துறைகளை தெரிவித்தனர்.
Next Story