மிரட்ட வருகிறது அடுத்த புயல்... வரும் 6 முதல் 8ம் தேதி வரை... - வானிலை ஆய்வு மையம் சொன்ன தகவல்

x
  • தென்கடல் வங் கக் கடலில் வரும் 6ம் தேதி வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவக்கூடும்.
  • இதனால் அப்பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, 8ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும்.
  • இன்று முதல் வரும் 7ம் தேதி வரை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
  • இன்று ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர்,
  • கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், நாமக்கல், மதுரை, திண்டுக்கல், காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
  • வரும் 6 முதல் 8ம் தேதி வரை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்
  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
  • இன்று குமரிக்கடல், கேரள கடலோரம், லட்சத்தீவு, இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடலிலும், சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்