அடுத்தடுத்த ரெய்டு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன..? - முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்
தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.
அமைச்சர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்ற நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு அமைச்சரவை கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் கூட உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர். மத்தியஅரசு, விசாரணை அமைப்புகளை ஏவி எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கைகளை கண்டிக்கும் விதமாக தமிழக சட்டசபையை உடனே கூட்டி, மத்திய அரசுக்கு எதிரான கண்டன தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கை பற்றியும் அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
Next Story