அடுத்த மாதம்.. அணு ஆயுதம்..ரஷ்யா அதிரடி அறிவிப்பு
பெலாரஸ் நாட்டிற்கு அணு ஆயுதங்கள் அடுத்த மாதத்திற்குள் வழங்கப்படும் என ரஷ்ய அதிபர் புதின் அறிவித்திருப்பது சர்வதேச அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில், உக்ரைனின் அண்டை நாடான பெலாரஸ் அதிபருடன், புதின் ஆலோசனை நடத்தினார். பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை வைப்பதற்கான கட்டமைப்புகள் ஜூலை மாத தொடக்கத்தில் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டது. இந்த பணிகள் நிறைவு பெற்றவுடன் ரஷ்ய அணு ஆயுதங்கள் பெலாரஸ் நாட்டிற்கு வழங்கப்படும் என புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் இந்த அறிவிப்பு, உக்ரைன் மற்றும் மேற்கு நாடுகளுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story