அடுத்த அதிரடி.. சைலெண்டாக இறங்கும் ஓபிஎஸ்

x

ஓ.பி.எஸ் அணி சார்பில் அடுத்த மாநாடு நடத்துவது தொடர்பாக மேற்கு மண்டல மாவட்ட செயலாளர்களுடன் வரும் சனிக்கிழமை அன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் ஆலோசனை நடத்தவுள்ளார். கடந்த மே மாதம் 8-ஆம் தேதி சென்னையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்த ஓ.பி.எஸ், அடுத்தக்கட்ட நடவடிக்கையாக அதிமுகவை மீட்க இருவரும் இணைந்து செயல்படவுள்ளதாக கூட்டாக அறிவித்தனர். அதைத் தொடர்ந்து தஞ்சையில் நடந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் இல்லத் திருமணத்தை இருவரும் இணைந்து நடத்தி வைத்தனர். இந்நிலையல், அடுத்த மாநாடு குறித்து மேற்கு மண்டல மாவட்ட செயலாளர்களுடன் ஓ.பி.எஸ், வரும் சனிக்கிழமை சென்னையில் ஆலோசனை நடத்தவுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்